எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
உழைப்பில் உறுதி கொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்லசெயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச் செல்லுங்கள்.
உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.