எந்தவொரு வேலையும் சலிப்பூட்டுவதல்ல. எல்லா வேலையிலும் ஒரு சவால் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத
அந்தச் சவால் 'இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி?' என்பதுதான்.
தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் “தனக்கு மிஞ்சிய தர்மம்’ என்பதாகும்
கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அதுகட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மனநிறைவோடு இருப்பது தான்.