நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்
உங்கள் செயல்முறைக்கேற்பவே
நீங்கள் உருவாகிறீர்கள்.
மிதமான செயல்களைச் செய்வதால்
உங்கள் உணர்வும்
மிதமாகவே இருக்கும்.
துணிவான செயல்களைச்
செய்வதன் மூலம்
நீங்கள் துணிச்சல் மிக்கவராவீர்கள்.
எதிலும் குற்றம் குறை காண்பவர்
நட்சத்திரங்களின் இரகசியங்களை
எக்காலத்திலும் கண்டறிவதில்லை.
வரைபடத்தில் இடம் பெறாத
நிலத்தை அவர் சென்றடைவதில்லை.
மனித ஆர்வத்துக்கான
புதிய சொர்க்கத்தை ஏற்றிடவும்
அவர் இசைவாவதில்லை.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது. நம் அச்சங்கலைக் கடப்பதன் மூலம் நாம் கற்றுணர முடியுமாயின், நம்முடைய இயற்கைத் தன்மையை நம்மால் வெளிப்படுத்த இயலுமாயின் வாய்ப்புகள முடிவற்றவைதாம்.