செயலூக்கத்துடனும்,நோக்கத்துடனும்
செய்யப்படுகிற வேலை திடமான ஆரோக்கியத்துக்கும்
போற்றத்தக்க சாதனைக்கும், தெளிவான மனச்சான்றுக்கும்,
புத்துணர்வூட்டும் உறக்கத்துக்கும்,
வழிவகுக்கும்-எப்போதுமே
மனிதன் பெற்ற வரம்.
இந்தக் கணத்தைப் போல் உகந்த பொழுது வேறொன்றில்லை.
தன்னுடைய தீர்மானங்களை மனிதன்
உடனுக்குடன் நிறைவேற்றத் தவறினால்
பிற்பாடு அவற்றில் இருந்து நம்பிக்கையை
அவன் பெறுவதற்கில்லை.
அவசர உலகின் வேகத்தில் அவை இழக்கப்படலாம்.,
அழிந்து விடலாம் அல்லது சோம்பல் என்கிற
சதுப்பு நிலத்தில் சிறிது சிறிதாய் அமிழ்ந்தும் விடலாம்
எதிலும் குற்றம் குறை காண்பவர்
நட்சத்திரங்களின் இரகசியங்களை
எக்காலத்திலும் கண்டறிவதில்லை.
வரைபடத்தில் இடம் பெறாத
நிலத்தை அவர் சென்றடைவதில்லை.
மனித ஆர்வத்துக்கான
புதிய சொர்க்கத்தை ஏற்றிடவும்
அவர் இசைவாவதில்லை.